Thursday, February 25, 2016

ஒரு நாள்


ஒரு நாள்




நள்ளிரவுத் தூக்கம் தூக்கத்துல கனவு

கனவுல அவ வந்தா தூக்கமும் கனவாகும்

கனவு கலைய தூக்கம் தெளிய காலை மணி எட்டாகும்

குளிச்சும் குளிக்காம வந்து

வளிச்சிக்குட்டு நிப்பேன் தலைய ‍ -  பின்னே 

சாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் வந்து நின்னா

கண்களும் தேடும் நாலுபுறம் ‍-  அவள‌

க்ளாஸ ஒரு உருட்டு உருட்டி நிமிஷத்துக்கு 

பத்துதரம் உத்து உத்து பார்த்தா

காதோர அழகுமுடி மறச்சு நின்னு ஆடும் 
                      
                      -   கண்ண பாக்க விடாம‌

காத்துல அந்த முடி ஒதுங்குமா ஒதுங்காதானு

எதிர்பார்த்துக் காத்துருந்தா முடிஞ்சுபோகும்  - ஒரு நாளே...!




( நண்பன் காளியின் டைரியிலிருந்து )










Wednesday, February 24, 2016

பிரண்டன் மெக்கல்லம் - ‍ நவீன யுகத்தின் கிரிக்கெட் வீரன்

பிரண்டன் மெக்கல்லம் - ‍ நவீன  யுகத்தின் கிரிக்கெட் வீரன்





கோடி மகன்களின் நாயகனே கோடி மக்களின் மன்னவனே.. இந்த வரிகள் அநேகம் பேருக்கு மறந்து போயிருக்கலாம்..  எனக்கு நினைவிருக்கிறது.... ஆம் முதல் ஐபிஎல் தொடரின் தமிழ் தீம் சாங். ஏகத்துக்கும் எதிர்பார்த்த ஒரு தொடர். இது வரையில் பார்த்திராத  ( ஆசிய 11, உலக 11 எல்லாம் பேப்பரில் படித்தது தான்) ஒரு புது முயற்சி. வேற்று நாட்டு வீரர்களுடன் உள்ளூர் அணிகளுக்கெதிரான கலர்புல் டி20 தொடர். இந்தியா உலகக் கோப்பை வென்றிருந்த நேரம், டிராவிட்டின் அணி நீக்கத்துக்குப் பின் அவர் பெங்களூர் கேப்டனான தருணம் என உலகக்கோப்பையைக் காட்டிலும் அதிகம் எதிர்பார்த்த தொடர்.


Monday, February 22, 2016

நீயா நானா‍- கடைசி பென்ச் மாணவர்கள்

நீயா நானா‍- கடைசி பென்ச் மாணவர்கள்


இடையில் என்னவோ தெரியவில்லை அந்த மழை வெள்ள எபிசோட்டிற்கு பிறகு நீயா நானாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. இன்று ஹாஸ்டலில் இரவு உணவை முடித்துவிட்டு எதார்த்தமாக சானல் மாற்றும் போது BACK BENCHERS பற்றிய விவாதம் கண்ணில் பட்டது. அதே நேரம் ப்ரோ கபடியை அனைவரும் ஆர்வமாய் ரசித்துக் கொண்டிருந்தனர். ஏதொ நம்ம இன்ப்ளுயன்ஸ் வச்சு கொஞ்சமாய் ஆள்திரட்டி, சண்டை போட்டு கடைசியில் மாற்றச் செய்துவிட்டோம். இந்த மாதிரி கஸ்டப்பட்டு சண்டைபோட்டு மாற்றும் டாபிக்கெல்லாம் சில சமயங்களில் மொக்கையாகிவிடும், அது பெரிய பல்ப் ஆகிவிடும் .ஆனா நேத்து தப்பிச்சுட்டோம்னு தான் சொல்லணும். சுருக்கமான ஆனால் ஒரு சிறப்பான நீயா நானா நேற்றையது.

Thursday, February 18, 2016

விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?

விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?


இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை  இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.

Tuesday, February 16, 2016

புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?


புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?


தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கருத்துக் கணிப்பை நடத்திவிடுவது என்பது எல்லா ஊடகத்தினருக்கும் எழுதப்படாத விதி ஆகிவிட்டது. சரி எடுக்கப்படும் கணிப்புகளாவது குறைந்தபட்ச நேர்மையைக் கொண்டிருக்கின்றனவா என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.லயோலா ஆரம்பித்து வைத்த இந்த கணிப்பு கண்ணாமூச்சி ஆட்டம், தேர்தல் தேதிவரை தொடரத்தான் போகிறது. எல்லாமுமே அதிமுகவை விட திமுக நூலிழை வித்தியாசத்தில் பிந்தங்கி தமிழக மக்கள் மாற்றம் என்றால் என்ன என்று யோசிக்கக் கூட இடம் தராதவைகளாகவே இருக்கப் போகிறது. 

டிராவிட்டுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?


டிராவிட்டுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?

ராகுல் டிராவிட். உலகின் ஆகச்சிறந்த டெக்னிக்கல் கிரிக்கெட்டர். ஆனால் அதிகம் பேசப்படாத, அதிகம் மரியாதை செலுத்தப்படாத, மற்ற வீரர்களின் சாதனைகளின் நிழலிலேயே தன் மொத்த சாதனைகளையும் கடந்துவிட்ட கவனிக்கப்படாத கிரிக்கெட் வீரர் அவர் தான். சரி வீரராகத்தான் அதிர்ஸ்டம் இல்லையென்றால் ஓய்வுக்குப் பின்னரும் கூடவே அப்படியே நடப்பது ஒவ்வொரு டிராவிட் ரசிகரின் துரதிஸ்டம். தொடரும் உதாரணம், நேற்றைய தோல்வி. இருக்கட்டும் துரதிஸ்டம் எவ்வளவு தூரம் டிராவிட்டை துரத்துகிறதோ அதே போல் நாங்களும் பின் தொடர்வோம் எப்போதும்.

Sunday, February 14, 2016

மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?


மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?

எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை வித்தியாசமாக அமையப் போகிறது வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல். மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கூட. எப்போதும் ஆளும் கூட்டணி, அதற்கு எதிரான ஒரு கூட்டணி, மூன்றாவதாக சிறிய அணி என நடைபெற்ற தேர்தல் இம்முறை பலமுனை போட்டிகள் கொண்டதாக இருக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்ததே..! தற்போதைய சூழலில் அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நல கூட்டணி, பாமக, புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ள நாம் தமிழர் கட்சி, தனித்து விடப்பட்டுள்ள பா.ஜ.க என ஆறு முனை போட்டி. கடைசிநேர மாற்றத்திற்குட்பட்டு 5 முனைப் போட்டி என்பது உறுதியான ஒன்று.


Thursday, February 11, 2016

இறுதிச்சுற்று


இறுதிச்சுற்று

கொஞ்சம் லேட் என்றாலும், மனதில் நினைத்ததை எழுதிவிடலாம் என்பதால் தான்......

அரண்மனை 1 முதல் நாள் இரவுக்காட்சி ஹாஸ்டலே வெக்கேட் ஆனதைப் போல எல்லோரும் சென்று பார்த்த திரைப்படம். ஆனால் என்னவோ தெரியவில்லை, அரண்மனை 2 யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இன்னும் சொல்லப் போனால் விருப்பமும் இல்லை. இறுதிச்சுற்று பட ரிலீஸன்று க்ளாஸ் நண்பர்கள் மாலைக் காட்சி சென்று வந்து படம் குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள். என்ன டா என விமர்சனம் படிக்காமல் ஸ்டார்ஸை மட்டும் பார்த்தேன், 4 ஸ்டார் இருந்த்து. அட, மிஸ் பண்ணக் கூடாது என அடுத்த நாள் இரவுக்காட்சிக்கு கிளம்பினோம். ( எப்போதும் இரவுக்காட்சியில் பார்ப்பது தனி சுகம், அதும் பார்த்துவிட்டு வாட்ஸ்மேனுக்கும் ட்யூட்டருக்கும் தெரியாமல் ஹாஸ்டல் சுவரை ஏறிக் குதித்து வரும் த்ரில்லும் கூட ) படம் நன்றாக இருக்கிறது என்ற வாய்மொழி விமர்சனம் பரவியிருந்ததால் நல்ல கூட்டம். அதுவும் இளைஞர்கள் கணிசம். சனி இரவுக்காட்சி, நெல்லையின் பெரிய தியேட்டரில் (பிவிடி) 80 % நிரம்புவது சாதாரண விசயம் அல்லவே..?